Picsart மூலம் ஆன்லைனில் வண்ணங்களைக் கலந்து தரமான திருத்தங்களை உருவாக்குங்கள்
கண்ணைக் கவரும் காட்சி மாற்றங்களை உருவாக்க, வண்ணங்களைக் கலக்கும் கருவியில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது.
நீங்கள் எடுத்த புகைப்படத்தைப் பார்த்து, அதில் ஏதோ சிறப்பு குறைவாக இருப்பதாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? யதார்த்தமற்ற ஓர் அழகோ, நிஜ வாழ்க்கையில் உருவாக்க முடியாத கலைநயமோ தேவைப்பட்டிருக்கலாம். அத்தகைய நேரத்தில் கலப்பு முறைகள் உதவும். ஒரு கலப்புக் கருவி மூலம் பல படங்களை இணைத்து, வண்ணங்களைக் கலந்து முற்றிலும் புதுமையான, தனித்துவமான படைப்புகளை உருவாக்கலாம். அன்றாடப் புகைப்படங்களைப் புகைப்படக் கலைப் படைப்புகளாக மாற்றவும் முடியும். அனுபவமில்லாதவர்களும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய கலப்புக் கருவியை Picsart வழங்குகிறது. இதன் மூலம் அனுபவமிக்க புகைப்படக் கலைஞர் உருவாக்கியதைப் போலவே வண்ணங்கள் கலந்த படங்களை உருவாக்கலாம்.
வண்ணங்களைக் கலந்து அழகான ஒன்றை உருவாக்குங்கள்
மேகமூட்டமான, சாம்பல் நிற நாளில் எடுத்த நகர வானளாவிய கட்டடங்களின் புகைப்படம் உங்களிடம் உள்ளதா? வண்ணமயமாக்க விரும்பும் கருப்பு வெள்ளைப் படம் உள்ளதா ? உங்கள் படங்களை மாற்றவும் அடுக்குகளைக் கலக்கவும் இதுவே சரியான காரணம். பிடித்த புகைப்படத்தைப் பிரகாசமாக்குங்கள் அல்லது கருமையாக்குங்கள், கலைநயத்தை உருவாக்கப் படங்களை ஒன்றின் மேல் ஒன்றாக இடுங்கள், அல்லது தனித்துவமான ஒன்றை உருவாக்கப் படங்களை இணைத்துப் பாருங்கள். வண்ணக் கலையில் முடிவில்லா சாத்தியங்கள் உள்ளன. அவை அனைத்தையும் எளிதாக உருவாக்கலாம்.
- படங்களை இணைத்துப் புதிய காட்சியமைப்பை உருவாக்குங்கள்

வண்ணக் கலவை எளிதாக்கப்பட்டுள்ளது
கிராஃபிக் டிசைன் அல்லது தொழில்முறை புகைப்பட அனுபவம் தேவையில்லை. கலப்பு முறைகளைத் தேர்ந்தெடுப்பதை Picsart எளிதாக்குகிறது. ஒரே கிளிக்கில், பதிவிறக்கம் செய்து அச்சிடக்கூடிய அல்லது சமூக ஊடகங்களில் பகிரக்கூடிய புதிய படைப்புகளை உருவாக்கலாம். கலப்புக் கருவியைத் திறந்து, பல்வேறு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குப் பிடித்த முடிவு கிடைக்கும் வரை படத்தைத் திருத்துங்கள். கடினமான வேலைகளை எல்லாம் கலப்புக் கருவியே செய்துவிடும்.

உங்களுக்குத் தேவையான பல்வேறு வண்ணக் கலவைகள்
புதிய, கண்ணைக் கவரும் படைப்புகளாக மாற்ற, எந்தப் படத்தையும் திருத்துவதற்கான பல்வேறு முறைகளுடன் Picsart கலப்புக் கருவி வருகிறது. படத்தை இருட்டாக்குங்கள் அல்லது வெளிச்சமாக்குங்கள், மெல்லிய அல்லது வலுவான ஒளி விளைவுகளை முயற்சியுங்கள், கண்கவர் கலவையை உருவாக்கப் படங்களை ஒன்றின் மேல் ஒன்றாக இடுங்கள், இன்னும் பலவற்றைச் செய்யுங்கள். நீங்கள் குறிப்பிட்ட வண்ணக் கலவைகளை முயற்சிக்க விரும்பினாலும், சிறிது உத்வேகம் தேடினாலும், கலப்பு முறைகளின் தொகுப்பில் உங்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன.
- வண்ணங்கள் எவ்வாறு இணைகின்றன என்பதைத் தேர்வுசெய்க

திருத்தமும் தனிப்பயனாக்கமும் எளிதாக்கப்பட்டுள்ளன
வண்ணங்களைக் கலப்பதற்கான கருவிகளுக்கு அப்பால், உங்கள் படத்தை மேலும் மேம்படுத்தப் பலவிதமான திருத்த மற்றும் தனிப்பயனாக்கக் கருவிகளும் உள்ளன. அமைப்பை மாற்றுங்கள். உரையைச் சேர்க்கவும் அல்லது திருத்தவும். இரட்டை வெளிப்பாடு விளைவுகளை உருவாக்குங்கள். வண்ணமயமான ஸ்டிக்கர்களைச் சேர்க்கவும். பின்னணியை மாற்றவும் அல்லது அகற்றவும். வானத்தை மாற்றுங்கள், மேலும் உங்களால் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் செய்யுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து தனிப்பயனாக்கம் மற்றும் திருத்தக் கருவிகளும் இங்கே கிடைக்கின்றன.

வண்ணக் கலப்புக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது?
பயனுள்ள அம்சங்கள் நிறைந்த வண்ணக் கலப்புக் கருவி
வண்ணக் கலவை குறித்த கேள்விகள்
வண்ணக் கலப்புக் கருவி மூலம் வெவ்வேறு படங்களிலிருந்து வண்ணங்களை இணைக்கலாம். படங்களை ஒன்றின் மேல் ஒன்றாக இடுவதன் மூலமாகவோ, சாயல், ஒளிர்வு, செறிவு மற்றும் பிற வண்ண அம்சங்களைச் சரிசெய்வதன் மூலமாகவோ, எந்தப் படத்திற்கும் முற்றிலும் புதிய வடிவத்தை உருவாக்கலாம்.
Picsart இடம்பெற்றுள்ள ஊடகங்கள்
மெருகூட்டப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் படைப்புத் திட்டங்களுக்கு வண்ணங்களைக் கலக்கவும்
Pro
Most popularAI tools for everyday creative work.
Ultra
Most powerfulHeavy AI usage for creators & teams.




