AI Background ஜெனரேட்டர் மூலம் தரமான பின்னணிகளை இலவசமாக உருவாக்குங்கள்
Picsart AI Background கருவியைப் பயன்படுத்தி, உங்கள் படத்தின் பொருளுக்கேற்ற உயர்தரமான, யதார்த்தமான, தனிப்பயனாக்கக்கூடிய AI பின்னணிகளை உருவாக்குங்கள்.
AI பட மாடல்களைக் கொண்டு AI பின்னணிகளை உருவாக்குங்கள்
AI பின்னணிகளை மேம்பட்ட காட்சிகளாகவும், வடிவமைப்புக் கருத்துகளாகவும், திருத்தத் தயாரான சொத்துகளாகவும் மாற்ற பட மாடல்களைப் பயன்படுத்துங்கள்.
தனிப்பயன் AI பின்னணிகளால் பழைய பின்னணிகளை உடனடியாக மாற்றுங்கள்
சில நேரங்களில், சரியான காட்சியைத் தேடி மணிநேரங்களைக் கழித்தும் எதுவும் கிடைக்காமல் போகலாம். AI மூலம் அந்தப் பிரச்சினை இனி இல்லை. எதையும் கையால் வரையவோ மாற்றியமைக்கவோ தேவையின்றி, யாரும் புதிதாகப் பின்னணிகளை உருவாக்குவது இப்போது எளிது. உங்கள் படத்தைப் பதிவேற்றி, சில சொற்களில் உங்கள் கற்பனையை விவரியுங்கள்; ஏற்கெனவே உள்ள பின்னணியை மாற்ற, Picsart ஜெனரேட்டிவ் AI மூலம் பிரத்யேகப் பின்னணியை உருவாக்கும்.

தனிப்பயன் AI பின்னணிகளுடன் ஸ்டுடியோ தரக் காட்சிகளை நீங்களே உருவாக்குங்கள்
உங்கள் கைப்பேசி கேமராவையும் Picsart-ஐயும் பயன்படுத்தி ஸ்டுடியோ தரப் படங்களை உருவாக்க முடியும் என்றால், விலையுயர்ந்த போட்டோஷூட்களும் ஸ்டாக் புகைப்பட வழங்குநர்களும் தேவையில்லை. AI Background Generator மூலம் சாதாரணப் படங்களை, பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் தயாரிப்புப் படங்களாகவும் விளம்பரப் பொருட்களாகவும் மாற்றுங்கள். உங்கள் தயாரிப்புப் புகைப்படங்கள், சமூக ஊடக விளம்பரங்கள், உருவப்படங்கள் மற்றும் பலவற்றை மேம்படுத்த, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பாணிகளில் மிக யதார்த்தமான, சூழலுக்கேற்ற பின்னணிகளை உருவாக்குங்கள்.

பின்னணி உருவாக்கி மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்று பாருங்கள்
உங்கள் தயாரிப்புக்கான சூழலை உருவாக்குங்கள்

உருவாக்கிய பின்னணிகளுடன் தரமான மின் வணிகப் படங்களை உருவாக்கி செலவைக் குறையுங்கள்
பொருட்களைப் படம்பிடிக்கும்போது புகைப்படக் கலைஞர்கள், விளக்குகள், கேமரா உபகரணங்கள், படப்பிடிப்புப் பொருட்கள், ஸ்டுடியோ எனப் பல விஷயங்கள் தேவைப்படும். இவை அனைத்தையும் தவிர்த்து, தயாரிப்புப் படங்களுக்குத் தரமான பின்னணிகளை உருவாக்க Picsart AI Background மாற்றியைப் பயன்படுத்தி நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துங்கள். முக்கியமான தயாரிப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பாமல், அதைத் திறம்படக் காட்சிப்படுத்தும் செட்களை AI உருவாக்கட்டும்.

உங்கள் தயாரிப்புக்கான பின்னணி பரிந்துரைகளை உடனடியாகப் பெறுங்கள்
தானாகக் கிடைக்கும் உடனடி பின்னணி பரிந்துரைகளுடன் உங்கள் காட்சி உள்ளடக்கப் பணிப்பாய்வை வேகப்படுத்துங்கள். ப்ராம்ப்ட் பெட்டியில் எதையும் தட்டச்சு செய்யாமலேயே தரமான முடிவுகளைப் பெறுங்கள். உங்கள் தயாரிப்புப் படத்தைப் பதிவேற்றி, மீதியை background maker பார்த்துக்கொள்ளட்டும். தானியங்கிப் பின்னணி அகற்றல் மற்றும் சூழலுக்கேற்ற பின்னணி உருவாக்கம் மூலம், மின் வணிகத் தயாரிப்புப் புகைப்படங்களைத் தயாரிக்கச் செலவிடும் நேரத்தைப் பெருமளவு குறையுங்கள்.

உங்கள் பிராண்டுக்கு ஏற்ற AI பின்னணிகளை உருவாக்குங்கள்
வெவ்வேறு பாணிகளில் பின்னணிகளை உருவாக்கும்போது வாய்ப்புகளுக்கு எல்லையே இல்லை. ப்ராம்ப்ட் பெட்டியில் உங்கள் பிராண்டின் பாணியை விவரியுங்கள் அல்லது உடனடி முடிவுகளுக்கு முன்கூட்டியே உருவாக்கப்பட்ட விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். ஒரே தயாரிப்புப் படத்துக்கான பல பாணிகளை விரைவாகப் பார்த்து, உங்கள் பிராண்டுக்கு எது சிறந்தது எனத் தெரிந்துகொள்ளுங்கள். குறைந்தபட்ச வடிவமைப்பிலான இளஞ்சிவப்புப் பின்னணியில் தயாரிப்பு ஸ்டாண்டில் வைக்கப்பட்ட மின் வணிகப் படமா வேண்டும்? அல்லது அடர் பளிங்குக் கல் சமையலறை மேடையுடன் கூடிய சாதாரணமான சூழலா? AI அனைத்தையும் உருவாக்கும்.

தயாரிப்புப் பட்டியல்கள் முழுவதும் ஒரே பாணியைப் பேணுங்கள்
உங்கள் தயாரிப்புக் காட்சிகள் அனைத்திலும் இணக்கமான தோற்றத்தைப் பேண விரும்புகிறீர்களா? வெவ்வேறு AI பின்னணி பாணிகளை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் பிராண்டுக்குப் பொருத்தமான ஒன்றைக் கண்டறிந்ததும், செயல்முறையை இன்னும் வேகப்படுத்த மற்ற படங்களிலும் அதே ப்ராம்ப்டைப் பயன்படுத்துங்கள்!

சுயவிவரப் படங்களுக்கான பின்னணிகளை உருவாக்குங்கள்
உங்கள் சுயவிவரப் படத்துக்கான பின்னணிகளை உருவாக்கி, இணையத்தில் தனித்துவமாகத் தோன்றுங்கள். AI Background-ஐ தனிப்பயன் புகைப்படப் பின்னணி உருவாக்கியாகப் பயன்படுத்தி, உங்கள் உருவப்படங்களுக்கு வியப்பூட்டும் பின்னணியைப் பெறுங்கள். வான் கோவின் Starry Night ஓவியத்தின் முன் “போஸ்” கொடுத்தால் என்ன? அல்லது தேர்வாளர்களைக் கவரும் வகையில், நேர்த்தியான மற்றும் தொழில்முறையான உருவப்படத்துக்கு எளிய ஸ்டுடியோப் பின்னணியா?

Picsart மூலம் AI உருவாக்கிய பின்னணிகளைத் தாண்டிச் செல்லுங்கள்
AI மூலம் இயங்கும் புகைப்படத் திருத்தக் கருவிகளைக் கொண்டு உங்கள் காட்சி உருவாக்கப் பணிப்பாய்வை மேம்படுத்துங்கள். படத் தரத்தை மேம்படுத்துவது முதல் AI கலை, வால்பேப்பர்கள், AI அவதார்கள் மற்றும் பலவற்றை உருவாக்குவது வரை அனைத்தையும் செய்யுங்கள்! இவை அனைத்தும் ஒரே வசதியான இடைமுகத்தில் இருப்பதால், கருவிகளுக்கு இடையே மாற வேண்டியதில்லை.

பின்னணியை உருவாக்குவது எப்படி
How to
உங்கள் படத்தைப் பதிவேற்றுங்கள்
பின்னணியை மாற்ற விரும்பும் படத்தைத் தேர்ந்தெடுங்கள்.
AI Background மூலம் படங்களுக்கான பின்னணிகளை உருவாக்குங்கள்
நவீன background maker மூலம் தனித்துத் தெரியும் காட்சிகளை உருவாக்குங்கள். சில சொற்களில் உங்கள் கற்பனையை விவரித்து, படத்தின் பொருளுக்கு ஏற்ற பின்னணிகளை உருவாக்குங்கள்.

AI Background Generator பற்றிய கேள்விகள்
AI background creator, தனிப்பயன் AI பின்னணிகளை உருவாக்க AI Image Generator தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
ஊடகங்களில் Picsart




ஒவ்வொரு படைப்பாற்றல் யோசனைக்கும் பின்னணிகளை உருவாக்குங்கள்
Pro
Most popularAI tools for everyday creative work.
Ultra
Most powerfulHeavy AI usage for creators & teams.
Enterprise
Custom AI solutions for large organizations.
- Volume discounts on credit rate
- On-demand top-ups








