லோகோ மேக்கர்: AI மூலம் உயர்தர லோகோக்களை உருவாக்குங்கள்
Picsart AI லோகோ ஜெனரேட்டர் மூலம் உங்கள் சிறு வணிகம் அல்லது கூடுதல் தொழிலுக்குப் பொலிவான, தனித்துவமான பிராண்ட் அடையாளத்தை உருவாக்குங்கள். உங்கள் பிராண்டின் பெயரை எழுதி, வண்ணத் தொகுப்பையும் பாணியையும் தேர்ந்தெடுக்கவும் அல்லது லோகோ மாதிரியைப் பதிவேற்றவும். சில நொடிகளில் உயர்தர லோகோக்களை Picsart உருவாக்கிவிடும். உங்கள் பிராண்டை அதிகம் அறியச் செய்வதற்காக, லோகோ மேக்கர் உங்கள் பிராண்டின் பெயரையும் வடிவமைப்பில் திறம்பட இணைக்கும்.

AI பட மாடல்களைக் கொண்டு லோகோ யோசனைகளை உருவாக்குங்கள்
லோகோ கருத்துகள், பிராண்ட் குறியீடுகள் மற்றும் காட்சி பாணிகளை ஆராய பட மாடல்களைப் பயன்படுத்துங்கள்.
உடனடி லோகோ உருவாக்கம்
AI மூலம் சில நொடிகளில் லோகோக்களைப் புதிதாக உருவாக்குங்கள்.
மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம்
உங்களுக்குப் பிடித்த லோகோக்களை லோகோ மேக்கரில் பதிவேற்றி, அதே போன்ற பாணியில் முடிவுகளைப் பெறுங்கள்.
பெயரை அடிப்படையாகக் கொண்ட லோகோக்கள்
புதிதாக உருவாக்கப்பட்ட லோகோ வடிவமைப்பில் உங்கள் பிராண்டின் பெயரை AI நேர்த்தியாகச் சேர்க்கும்.
லோகோக்களை உருவாக்குவது எப்படி
குறைந்த செலவிலும் சிரமமின்றியும் தனித்துவமான லோகோக்களை உருவாக்குங்கள்
உங்கள் கூடுதல் தொழில் அல்லது சிறு வணிகத்துக்கான லோகோவை உருவாக்குவது இப்போது மிகவும் எளிது! வடிவமைப்பாளரைப் பணியமர்த்தாமலும் நீங்களே வடிவமைப்பாளராக மாறாமலும், எளிதில் அடையாளம் காணக்கூடிய, நினைவில் நிற்கும் லோகோக்களை நீங்களே உருவாக்குங்கள். உங்கள் லோகோ யோசனையை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லையா? ப்ராம்ப்ட்களை எழுதுவதற்கான நேரத்தை மேலும் மிச்சப்படுத்த, மாதிரி லோகோவை AI லோகோ ஜெனரேட்டரில் பதிவேற்றுங்கள்.

சில நொடிகளில் உங்கள் பிராண்ட் அடையாளத்தை மாற்றுங்கள்
கவனமாகப் பயிற்றுவிக்கப்பட்ட AI மாடல்களால், பல்வேறு வகை வணிகங்களுக்கான லோகோ வடிவமைப்புகளை Picsart AI லோகோ மேக்கர் உருவாக்குகிறது. சிறிய Etsy ஃபேஷன் கடை, வீட்டில் தயாரிக்கும் குக்கீ பிராண்ட் அல்லது கால்நடை மருத்துவமனை என எதற்காக லோகோ உருவாக்கினாலும், தொடர்புடைய முடிவுகளைத் தர AI தனது விரிவான அறிவுத் தளத்தைப் பயன்படுத்துகிறது.

பல்வேறு துறைகளுக்கான AI லோகோக்களை உருவாக்குங்கள்
Etsy கடை முதல் சிறிய உணவகம் அல்லது டிஜிட்டல் தயாரிப்பு வரை—இடையில் உள்ள அனைத்துக்கும், உங்கள் வணிகத்துக்கு ஏற்ற தனித்துவமான மற்றும் பொருத்தமான லோகோ விருப்பங்களை Picsart AI லோகோ மேக்கர் வழங்குகிறது.
உங்கள் AI லோகோவை அடிப்படையாகக் கொண்டு பிராண்ட் கிட்டை உருவாக்குங்கள்
உங்கள் பிராண்ட் கிட் உருவாக்கத்தை AI-யிடம் ஒப்படைத்து, படைப்பாற்றலைத் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள். முதன்மை வண்ணத் தொகுப்பு, பிராண்ட் எழுத்துருக்கள் மற்றும் லோகோ மாறுபாடுகளை வழங்கி, ஒருங்கிணைந்த பிராண்ட் அடையாளத்தை Picsart உருவாக்கட்டும். தேர்ந்தெடுத்த வண்ணங்களோ அல்லது எழுத்துருவோ பிடிக்கவில்லையா? தொடக்கப் பதிப்பை மேம்பட்ட அடிப்படையாகப் பயன்படுத்தி, உங்கள் கற்பனைக்கு ஏற்றபடி கிட்டில் எளிதாக மாற்றங்களைச் செய்யுங்கள். முடிந்ததும், உங்கள் பிராண்ட் கிட்டுக்கு ஏற்ப தானாகவே அமைக்கப்பட்ட டெம்ப்ளேட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

AI மூலம் உங்கள் லோகோவைத் தனிப்பயனாக்குங்கள்
AI மூலம் இயங்கும் புகைப்பட எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் AI லோகோக்களை எளிதாகத் திருத்துங்கள். விரைவான மாக்அப்களையும் தயாரிப்புப் புகைப்படங்களையும் உருவாக்க, உரையிலிருந்து படத்தை உருவாக்கும் AI ஜெனரேட்டரைப் பயன்படுத்தி, புதிதாக உருவாக்கிய உங்கள் லோகோவைச் சேருங்கள். அந்தக் காட்சிகளுக்கான உரையும் வேண்டுமா? AI Writer மூலம் உரையை உருவாக்குங்கள். அல்லது AI மூலம் இயங்கும் பொருள் நீக்கியைப் பயன்படுத்தி, உங்கள் AI-ஆல் உருவாக்கப்பட்ட லோகோவில் தேவையற்ற கூறுகளை மிகத் துல்லியமாக விரைவில் நீக்குங்கள்.

சரியான DIY பிராண்ட் அடையாளத்துக்கான முழுமையான லோகோ மேக்கர்
லோகோ மற்றும் பிராண்ட் அடையாளத்தை உருவாக்கத் தேவையான எல்லா கருவிகளையும் ஒரே வசதியான இடைமுகத்தில் பெறுங்கள்.
உங்கள் கற்பனையை விவரியுங்கள்
குறிப்பிட்ட லோகோ யோசனை உள்ளதா? அதைச் சில வார்த்தைகளில் விவரித்து, AI அதை காட்சியாக்கட்டும்.
லோகோ மாதிரிகளைப் பதிவேற்றுங்கள்
உங்களுக்குப் பிடித்த மாதிரி லோகோக்களை லோகோ கிரியேட்டரில் உள்ளிடுங்கள்; அதே பாணியில் முடிவுகளைப் பெறுங்கள்.
துறைக்குப் பொருத்தமான முடிவுகள்
உங்கள் வணிகத் துறையை உடனடியாக எடுத்துரைக்கும் லோகோ வடிவமைப்புகளை உருவாக்குங்கள்.
வண்ணத் தொகுப்பைத் தேர்ந்தெடுங்கள்
உங்கள் லோகோ வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் வண்ணங்களை நீங்களே கட்டுப்படுத்துங்கள்.
உடனடி முடிவுகள்
Picsart மூலம் லோகோவை உருவாக்க சில நொடிகளே போதும்.
தனித்துவமான வடிவமைப்புகள்
பிறருடன் பகிரும் பொருட்களிலும் பேக்கேஜிங்கிலும் பெருமையுடன் பயன்படுத்தக்கூடிய, எளிதில் அடையாளம் காணக்கூடிய லோகோக்களை நீங்களே உருவாக்குங்கள்.
இதே போன்ற முடிவுகளை உருவாக்குங்கள்
ஆரம்பப் பதிப்பு பிடிக்கவில்லையா? மேலும் பல மாறுபாடுகளை உருவாக்க, “இதே போன்ற பாணிகளை ஆராயுங்கள்” அம்சத்தைப் பயன்படுத்துங்கள்.
உயர்தர ஏற்றுமதிகள்
தெளிவான, அச்சிடுவதற்கு ஏற்ற தரத்தில் உங்கள் லோகோவைப் பதிவிறக்குங்கள்.
Picsart மூலம் உங்கள் படைப்புப் பயணத்தைத் தொடருங்கள்
புகைப்படத் திருத்தம் மற்றும் வடிவமைப்புக்கான முழுமையான கருவித் தொகுப்பை, பயன்படுத்த எளிதான ஒரே இடைமுகத்தில் அணுகுங்கள்.
AI லோகோ ஜெனரேட்டர் பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
AI லோகோ ஜெனரேட்டர் மேம்பட்ட அல்காரிதம்களைப் பயன்படுத்தி பல்வேறு வடிவமைப்புக் கூறுகளையும் போக்குகளையும் பகுப்பாய்வு செய்கிறது. இதன் மூலம், வெவ்வேறு துறைகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற லோகோக்களை உருவாக்குகிறது. நீங்கள் தொழில்நுட்பம், சட்டம், வடிவமைப்பு அல்லது சுகாதாரத் துறையில் இருந்தாலும், உங்கள் வணிகத்துக்கு ஏற்ற தொழில்முறை மற்றும் பொருத்தமான லோகோ வடிவமைப்புகளை உருவாக்கத் தேவையான நுணுக்கங்களை AI புரிந்துகொள்கிறது.
ஊடகங்களில் இடம்பெற்றவை




கிரியேட்டர்கள் பயன்படுத்தத் தயாரான திட்டங்களுக்கான லோகோ வடிவமைப்புகளை உருவாக்குங்கள்
Pro
Most popularAI tools for everyday creative work.
Ultra
Most powerfulHeavy AI usage for creators & teams.
























